தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு
தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு
வியாபார நோக்கத்திற்காக மேலை நாடுகள் அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், காதைச் சொறிபவர் தினம், ஜலதோஷம் வந்த தினம் என்று தினங்களை அடையாளம் காட்டி், அந்த நாட்களைப் பணத்தைக் கொட்டிக் கொண்டாட நம்மை மறைமுகமாக வலியுறுத்திவருகிறார்கள். அவை நம் கல்லாப்பெட்டிகளைக் காலியாக்கும் நாட்களாகவே இருக்கின்றன.
நம் மரபிலும் இதே போல நாட்களை அடையாளம் கண்டிருக்கின்றனர். நம் முன்னோர்கள் அவர்களின் உய்வுக்குக் காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வழிபட்டு வலிமையும் பெற்று, வரப்போகும் சந்ததிக்கு இவ்வளமையான மரபை எடுத்துச் செல்ல முன்னிறுத்திய முக்கியமான நாட்கள் பல. அவை நம் கர்ம வினைப் பெட்டிகளைக் காலியாக்கும் நாட்களாகவே இருக்கின்றன.
இன்று குரு பூர்ணிமா.
ஹிந்துக்கள் தங்களுடைய குருமார்களைக் கொண்டாடி வணங்கும் நாள். நான்கு வேதங்களைத் தொகுத்தவரும், மகாபாரதத்தை இயற்றியவரும், பதினெண் புராணங்களை ஆக்கியவராகக் கருதப் படுபவரும் ஆன உலக குரு வியாச முனிவரின் பிறந்த நாளாகவும் சம்பிரதாயமாக இந்நாள் அறியப் படுகிறது. உலகம் முழுதும் இதுவரை தோன்றியுள்ள குருமார்களைப் போற்றும் வண்ணம் இக் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.
ரங்கநாதானந்தரின் காலடியில்
ஆங்கில மூலம்: எல். கே. அத்வானி (நன்றி: lkadvani.in )
மொழியாக்கம்: பனித்துளி
மொழியாக்கம்: பனித்துளி
இந்தியாவின் பண்டைய மற்றும் நவீன ஆன்மீக குருக்களிடம் இருந்து பலவற்றை அரசியல்வாதிகளும் ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லைகளற்ற துறவி

ஸ்வாமி ரங்கநாதானந்தர் குறித்து என்னுடைய சுயசரிதையில் (My Country My Life, Rupa & Co வெளியீடு) இங்கனம் சொல்லியிருக்கிறேன்:
“…நம்முடைய வாழ்நாளில் இருப்பதிலேயே பிரகாசமான ஆன்மீகப் பொலிவை இந்திய சமூகத்தின்மீது ஒளிர்ந்த விளக்கு”.
கராச்சியில் நான் கழித்த முதல் இருபது வருடங்களில் (1927 – 47) இந்த மகானுடனான என்னுடைய அனுபவங்களைப் பற்றி என்னுடைய சுயசரிதையில் இருந்த சில தகவல்கள், இந்தப் புத்தகத்திலும் இருப்பதைக் காணும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. புது தில்லியில், 15 மே 2005ல் ராமகிருஷ்ண இயக்கத்தில் நான் பேசிய பேச்சின் சிறுபகுதியும் இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஸ்வாமிஜி உடலை நீத்த 26 ஏப்ரல் 2005 அன்று அவருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் ஆகியோரும் வந்திருந்தனர்.
அந்த புத்தகத்தில் என்னுடைய அந்த சில அனுபவங்களைக் கண்டவுடன், அந்த அனுபவங்களை என்னுடைய இந்த வலைமனையில் உங்களோடு பகிர்ந்துகொள்ள எண்ணினேன். உங்களுடைய கருத்துக்களை எனக்குக் கண்டிப்பாக அனுப்புங்கள்.
——————
கராச்சியில் என் கடைசி மூன்று வருடங்களில் என் வாழ்க்கையையே மாற்றும் மற்றும் ஒரு ஆற்றலுக்கு ஆட்பட்டேன். ஸ்வாமி ரங்கநாதானந்தரின் பகவத் கீதை உபன்னியாசத்தைக் கேட்க ஒவ்வொரு ஞாயிறு மாலையும் ராமகிருஷ்ண ஆசிரமத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். மகாபாரதத்தில், வீரனான அர்ஜுனனோடு குருட்சேத்திரப் போர்க்களத்தில் கிருஷ்ணன் மேற்கொண்ட மனதை மயக்கும் தத்துவ உரையாடல்களைத் தெளிவாகவும், நேரடியாகவும் அத்தோடு ஆழமான பாங்கிலும் தெள்ளென அவர் விளக்கியது, ஸ்வாமிஜியின் கம்பீரமான ஆளுமையைப் போலவே என்னை வசீகரித்தது.
அப்போது ஸ்வாமிஜி, கராச்சி ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவராக ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மற்றும் அவரது சீடரான விவேகானந்தரின் போதனைகளை ஆறு வருடங்களாகப் பிரச்சாரம் செய்துவந்தார். எங்கோ தொலைதூரத்தில் இருந்த பர்மாவில் பல்லாண்டுகள் சேவை செய்தபின் கராச்சிக்கு அவர் வந்தார். இத்தனைக்கும் அவருடைய ஆரம்பமோ கேரளாவிலிருந்து ! ஆன்மீக மற்றும் மானுட சேவையாலான பாதையை மிக இளைய வயதிலேயே தேர்ந்தெடுத்த ஸ்வாமிஜி, பந்தாக்களில்லாத எளிமையான, இனிய மனிதர். வெகுவிரைவிலேயே அவர் என்மேல் அலாதியான அன்பைக் காட்டினார். சேவைநோக்கமும், அர்ப்பணிப்பும், அத்தோடு ஞான கோபுரமாகவும் இருந்த அந்த ஆளுமை என்னை ஆட்டிப்படைக்கும் கவர்ச்சியாகத் திகழ்ந்தது.
“இந்தக் குணங்களை நானும் வளர்க்க வேண்டும்” எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
கராச்சி ராமகிருஷ்ண இயக்கம்:
கராச்சி ராமகிருஷ்ண இயக்கம்:

ஆங்கிலேயர்களுடைய போர்க்கால கொள்கையினால், 1943ம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் நினைவுக்கு வருகிறது. உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைத் திரட்டி பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட மக்களுக்குத் தருவதற்காக ஸ்வாமிஜி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். மக்களின் தயாள உணர்வை அந்த வேண்டுகோள் தூண்டியதால், உடனடியாக ஐந்து லட்ச ரூபாய்கள் திரட்டப்பட்டன. அந்த மூலதனத்தைக் கொண்டு அரிசி வாங்கிய ஸ்வாமிஜி, ஸ்ரீலங்காவில் இருந்து வங்காளத்திற்குச் செல்லவிருந்த ஒரு நீராவிப்படகின் மூலம் அந்த அரிசியை ஏற்றுமதி செய்ய சிந்து மாகாண அரசின் அனுமதியைக் கோரினார்.
ஒரு அதிகாரி அவரிடம் சொன்னார், “நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், இதே காரணத்திற்காக முஸ்லீம் லீக்கும் அனுமதி கோரியுள்ளது. இந்த விஷயத்திற்காக அரசு அனுமதித்துள்ள கோட்டாவில், முஸ்லீம் லீக் பயன்படுத்தியது போக மீதி இருப்பதைத்தான் நாங்கள் தரமுடியும்”. சில வாரங்களில், அதே அதிகாரி ஸ்வாமிஜியிடம் சொன்னார், “முஸ்லீம் லீக் 60 டன் மட்டுமே அனுப்பியுள்ளது. கோட்டாவில் எஞ்சியிருப்பது முழுக்க இப்போது உங்களுடைய பங்குதான்”. ராமகிருஷ்ண ஆசிரமம் அனுப்பிய அரிசியின் அளவு 1240 டன்கள் !
மேன்மைமிக்க பல பெரியோர்களை ஸ்வாமிஜி ஆசிரமத்திற்கு அழைப்பது வழக்கம். அழைப்பை ஏற்று டாக்டர் ராதாகிருஷ்ணன் மடத்திற்கு தந்த வருகை மறக்க முடியாத நிகழ்வாக என் நினைவிற்கு வருகிறது. காசியில் உள்ள ஹிந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த அவர் அக்டோபர் 1945ல் மடத்திற்கு விஜயம் செய்தார். அவர் இரண்டு பிரசங்கங்களைச் செய்தார் – ஆசிரமத்தில் ஒன்று, டி.ஜெ. ஸிந்த் கல்லூரியில் ஒன்று. இரண்டு பிரசங்கங்களும் மிகப் பெரிய கூட்டத்தை வரவழைத்தன. அப்போது வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகத்திற்குக் கொஞ்சம் நன்கொடைகளைப் பெற்றுத்தர வேண்டும் என ராதாகிருஷ்ணன் ஸ்வாமிஜியிடம் வேண்டினார். கராச்சி வாழ் மக்கள் ரூபாய் 50, 000/- மதிப்புள்ள பணமுடிப்பைத் தந்தனர். அந்த அளவு பணம் கிடைப்பது அந்தக் காலத்தில் மிகவும் பொருள்வாய்ந்த நிகழ்ச்சி.
[டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1885 -1975) இருபதாம் நூற்றாண்டில் உலகப்புகழ் பெற்ற இந்திய தத்துவ மேதையாகவும், கல்வியாளராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும் (1952 -62), இரண்டாவது ஜனாதிபதியாகவும் (1962 – 67) விளங்கினார்.]

கராச்சியில் சுவாமிஜியின் உரைகேட்கும் கூட்டத்தினர்
1947ம் ஆண்டு நான் கராச்சியில் இருந்து வெளியேறினேன். ஆனால், இனி ராமகிருஷ்ண இயக்கத்தின் பணிகளைத் தொடர முடியாது என்ற நிலை ஏற்படும்வரை ஸ்வாமிஜி அங்கேயே தொடர்ந்து சேவையாற்றினார். மிகுந்த இதயவேதனையோடு கராச்சி மையத்தை மூடிய ஸ்வாமிஜி ஆகஸ்ட் 1948ம் ஆண்டு கராச்சியில் இருந்து வெளியேறினார். அவரோடு எனக்கிருந்த தொடர்பு, பிப்ரவரி 2005ம் ஆண்டு, தனது 98ம் வயதில் அவர் உடலை உகுத்த நாள்வரை தொடர்ந்தது.
தில்லியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக அவர் 1960களில் இருந்தபோதும், அதன்பின்பு ஹைதராபாத் மடத்தின் தலைவராக அவர் நீண்டகாலம் பணியாற்றியபோதும் அவரை அடிக்கடி சந்திப்பேன். 2003ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஒரு கூட்டத்திற்காகச் சென்ற நான், அகில உலக ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவராக அப்போது இருந்த அவரை, அந்த இயக்கத்தின் தலைமையகமான பேலூர் மடத்தில் கடைசியாகச் சந்தித்தேன்.
இந்த கடைசி சந்திப்பின்போது கராச்சியில் எங்களுடைய கடைசி நாட்களைக் குறித்தும், அப்போது நடந்த துயரமான நிகழ்ச்சிகளைக் குறித்தும், தேசப்பிரிவினையில் முகம்மது அலி ஜின்னாவின் பங்கு குறித்தும் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எங்களது அந்த உரையாடலின்போது, 11 ஆகஸ்ட் 1947ல் பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற ஜின்னாவின் பேச்சு குறித்து, முக்கியத்துவம் கொடுத்துப் பேசிய ஸ்வாமிஜி, “செக்யூலரிசம் என்றால் என்ன என்பது குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை ஜின்னாவின் அந்த உரையில் காணலாம்” என்றார். மே – ஜூன் 1945ல் பாக்கிஸ்தானில் ஜின்னா பற்றி நான் கூறிய கருத்துக்களை உருவாக்குவதில் ஸ்வாமிஜியுடன் நான் நிகழ்த்திய இந்த கடைசி உரையாடல், அடிமனத்தில் இருந்து, பெரிதும் பங்கு வகித்தது.
ஸ்வாமி ரங்கநாதானந்தர்:
ஸ்வாமி ரங்கநாதானந்தர்:
ஸ்வாமி ரங்கநாதானந்தர் நம்முடைய வாழ்நாளில் இருப்பதிலேயே பிரகாசமான ஆன்மீகப் பொலிவை இந்திய சமூகத்தின்மீது ஒளிர்ந்த விளக்கு. மேன்மையடைந்த ஆத்மா, ஆன்ம வேட்கையாளரான அவர், சமையல்காரராகவும், பாத்திரம் தேய்ப்பவராகவும் தனது ஆன்மீக வாழ்க்கையை ராமகிருஷ்ண மடத்தில் ஆரம்பித்து, ராமகிருஷ்ண விவேகானந்தர்களின் போதனைகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பரப்பிய பூஜிக்கப்பட்ட பிரச்சாரகர்.
தன் சொந்த முக்தியைப் பற்றிப் பேசி வருகிற வழக்கமான ஆன்மீக பிரச்சாரகராக அவர் இருந்ததே இல்லை. ஊக்கமளிக்கும் வகையில் அவர் வடிவமைத்த பொன்மொழி: “இறைசார் வேட்கையை மனிதம்சார் வேள்வியாக மாற்றுதல்”.
உலகம் சந்திக்கிற பல்வேறு வகையான வேதனைகளையும், சவால்களையும் மானுட உறவுகளை ஆத்மீகமாக திசை திருப்புவதனால மட்டுமே சமாளிக்க முடியும் என்பதை உலகத்திற்குச் சொல்வதுதான் அவருடைய வாழ்நாள் முழுவதும் வியாபித்திருந்த நோக்கமாக இருந்தது.
எழுதுவதிலும் பேசுவதிலும் ஸ்வாமிஜி திறன் மிக்கவராயிருந்தார். தொடர்ந்து பயணிப்பவராக இருந்த அவர், இந்தியாவிலும் உலகில் உள்ள மற்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான பிரசங்கங்களைச் செய்துள்ளார். தேசத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள், நிர்வாகிகள், அறிவியலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பங்கு என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த லௌகீக உலகில் இருந்து முற்றிலும் பற்றற்ற ஆன்மீக தலைவராக இருந்த ஒருவருடைய பிரசங்கங்களும் எழுத்துக்களும் அமைந்திருந்தன. வேறுபட்ட பிண்ணனிகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் சமூக தலைவர்களோடும் அவர் தொடர்புகொண்டிருந்தார். “மாறிவரும் சமூகத்திற்கான மாறாத மதிப்பீடுகள்” (Eternal Values for a Changing Society) என்ற நான்கு தொகுதிகள்கொண்ட புத்தகம் உலக மதங்களின் போதனைகளுக்கு மரியாதை செய்விக்கிறது.

செப்டம்பர் 2007 அன்று ஸ்வாமி ரங்கநாதானந்தரின் சரிதத்தை வெளியிடுவதற்காக, கேரளாவில் அவர் அவதரித்த திருச்சூருக்கு சிறிது தொலைவில் உள்ள பரனாட்டுக்கராவிலுள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அந்த சரிதையில், ஸ்வாமிஜியின் பல்லாண்டு சகாவான டாக்டர் டி.ஐ. ராதாகிருஷ்ணன் ஒரு சுவையான தகவலைப் பதிவு செய்துள்ளார். ஒரு முறை ஸ்வாமிஜி இஸ்லாம் மற்றும் முகம்மது நபியைக் குறித்து கராச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே வந்த ஒரு மனிதர் கடைசி வரிசையில் போய் உட்கார்ந்துகொண்டார். அவர் முகம்மது அலி ஜின்னா.
கிடைத்த தகவலின்படி, பிரசங்கம் முடிந்தவுடன் மேடைக்கு விரைந்த ஜின்னா, “ஸ்வாமிஜி, இதுவரை நான் என்னை ஒரு உண்மையான முஸ்லீம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்களுடைய இந்த பேச்சைக் கேட்டபின்பு, நான் ஒரு முஸ்லீம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். உங்களது ஆசிகளோடு உண்மையான முஸ்லீமாக முயல்வேன்”. “நாங்கள் மதிக்கும் அந்த கிருத்துவானவர்” (The Christ We Adore) என்ற தலைப்பில் ஸ்வாமிஜி பேசியபோதும் இதே போன்ற அனுபவங்கள் கிறுத்துவர்களோடும் ஏற்பட்டது என்று இதே கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
சுவாஜியின் இந்த உரையிலிருந்து ஒரு பகுதி : நன்றி – ஜடாயு வலைத்தளம்“தெய்வ அவதாரங்களில் ஒருவர் என்று இந்துக்கள் கண்டுணர்ந்து போற்றத் தகுந்த பல அம்சங்கள் ஏசு கிறிஸ்துவின் வாழ்விலும், உபதேசங்களிலும் உள்ளன. அவரது வாழ்வு இனிமையும், மென்மையும், துயரமும், சோகமும் இழைந்து ஆன்மீகத்தால் நிரம்பியது. ஆனால், இந்துக்களாகிய நமக்கு அவரது முடிவு என்பது ஒரு சோகம், அவ்வளவு தான். ஆன்மிகம் ததும்பும் அழகுணர்ச்சி எதுவும் அதில் இல்லை. நமது தெய்வ அவதாரங்களான ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் இவர்களது வாழ்க்கை முடிவுகளும் பெரும் சோகம் ததும்பியதாகவே இருந்தன. ஆனால் அந்த முடிவுகள் மீது நாம் சமயத்தைக் கட்டமைக்கவில்லை. இந்த மரணங்களை இயற்கை நியதியாக ஏற்றுக்கொண்டு அவர்களது வாழ்வின் அற்புதமான தருணங்களின் மீதே நம் சமயம் கட்டப் பட்டிருக்கிறது. ஏசு என்பவர் சிலுவையில் அறையப் படாமலே இருந்தாலும், அவரது வாழ்வும், உபதேசமும் இந்துக்களுக்குப் பிரியமானதாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கும், மேற்குலகிற்கும், இந்த சிலுவையில் அறைதல் என்ற துன்பியல் நிகழ்வு இல்லாமல், “ரத்தம் தோய்ந்த” தியாகம் இல்லாமல், ஏசுவின் வாழ்க்கை சாதாரணமானதாகவும், சக்தியற்றதாகவுமே தோற்றமளிக்கிறது. கிரேக்க துன்பியல் காவியங்களின் மரபில் தோய்ந்த மேற்குலகம் கிறிஸ்தவத்திற்கு இந்தத் தன்மை அளித்தது போலும்! ஆனால் இந்து மனத்திற்கோ வாழ்வு முழுவதும், உலகம் முழுவதுமே பிரபஞ்ச வடிவிலான இறைவனின் தெய்வ லீலை என்பதாகவே தோன்றுகிறது”.
தற்காலத்திற்கான ஆதிசங்கரர்:

கராச்சியிலிருந்து, டெல்லி ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவராக ஸ்வாமி ரங்கநாதானந்தர் வந்து சேர்ந்த போது அவருடைய உபன்னியாசங்களைக் கேட்கச் சென்றிருக்கிறேன். பின் அவர் ஹைதராபாத்திற்கு பணிக்கப்பட்டார். ஆனால், எப்போதெல்லாம் அவர் டெல்லிக்கு வந்தாரோ அப்போதெல்லாம் அவரோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் எனக்கிருந்தன. இந்த தேசத்தை உருவாக்க உழைத்த மேன்மையாளர்களான பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பேய்ஜி போன்ற பலர் மனவெழுச்சி பெறுவதற்காகவும், விவேகம் நிறைந்த ஆலோசனைகளுக்காகவும் ஸ்வாமிஜியைச் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு. அது அவருடைய மகத்துவத்தையும், உச்சமான ஆளுமையையும் பேசுகிறது.
News & Events
-
Appeal for Donation
You can donate to us using any of these methods: Google Pay/BHIM Pay, Bank Transfer, Cheque, DD, or... -
GOOD WISHES & PRAYERS FOR GOOD HEALTH DURING CORONA VIRUS SITUATION
DEAR DEVOTEES & WELL WISHERS IT IS MORE THAN A WEEK THAT CORONA VIRUS THREAT HAS LOOMED ALL OVER ... -
HARIPAD RKMATH Flood Relief Completed
Update on 6-9-2018 Dear Friends Flood relief Activities by Ramakrishna Math Haripad have been co... -
Notebook Drive by Ramakrishna Math Haripad
PHOTOS OF POOR STUDENTS GETTING FREE NOTE BUKS. WITH YOUR KIND HELP WE HAVE SPENT RS. 1,17,000 ( ... -
FOUNDATION STONE LAYING OF SADHU NIVAS AT HARIPAD ON 2ND MAY 2018
... -
Gurupoornima Celebration on 29th July 2018
... -
The Foundation Stone laying ceremony of the MONASTIC HOSTEL ( SADHU NIVAS)Will be held ON 2nd May 2018
Details can be seen here :- Foundation Stone Laying (more…)... -
Swami Vivekananda Jayanti Celebrations on 7 Jan 2018
... -
Message on 01.01.2018 (Sri Ramakrishna Kalpataru Day)
01.01.2018 (Sri Ramakrishna Kalpataru Day) Dear devotees, well wishers and friends N... -
YOUR KIND HELP NEEDED
YOU KNOW WE ARE STRIVING HARD TO BUILD THE HARIPAD RAMAKRISHNA MATH FROM THE BASE. YOU HAVE BEEN A...
Media Resources
Recent Articles
- श्री रामकृष्ण परमहंस की जीवनी की सचित्र हिंदी डॉक्यूमेंटरी
- Talk in Tamil: Asaiyum Arugadaiyum( Desiring n Deserving)
- Chanchalam Hi Manaha Krishna Part I (Hindi)
- How to overcome crisis: Japa Yajna Blessings Swami Virabhadrananda
- Lectures by Swami Virabhadrananda
View All